சுடச்சுட

  

  அணியில் சேர்க்காததால் தில்லி கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவர் அமித் பண்டாரி மீது தாக்குதல்

  By DIN  |   Published on : 12th February 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  amit-bandari


  இந்திய அணி முன்னாள் பந்துவீச்சாளரும், தில்லி கிரிக்கெட் சங்க மூத்த தேர்வாளர் குழுத் தலைவருமான அமித் பண்டாரி, மர்ம கும்பலால் தாக்கப்பட்டு காயமடைந்தார். 23 வயதுக்குட்பட்டோர் அணிக்கு தேர்வு செய்யப்படாத வீரரின் தலைமையில் இத்தாக்குதல் நடைபெற்றது.
  செயின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் தில்லி சீனியர் அணி திங்கள்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. வரும் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள தேசிய சையத் முஷ்டாக் டி20 சாம்பியன் போட்டிக்கான பயிற்சியில் அணி ஈடுபட்டிருந்தது.
  அப்போது அங்கிருந்த அமித் பண்டாரியை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் தலை, காதுபகுதியில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  23 வயதுக்குட்பட்டோர் அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளது தெரியவந்துள்ளது. அணியில் சேர்க்குமாறு அமித் பண்டாரியை, வீரர் அனுஜ் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அவருக்கு போதிய தகுதி இல்லை என பண்டாரி கூறியதால், ஆத்திரமடைந்து, குண்டர்களை தூண்டி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
  இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது என டிடிசிஏ தலைவர் ரஜத் சர்மா கூறியுள்ளார். அனுஜ் தேதாவுக்கு வாழ்நாள் தடை விதிக்க முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai