சுடச்சுட

  

   ஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்

  By DIN  |   Published on : 12th February 2019 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Kuldeep-Yadav


  ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி, பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் ஆகியோர் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
  ஐசிசி அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
  இதற்கிடையே திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலின்படி அணிகள் பிரிவில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. அதே நேரத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். ஆப்கன் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார்.
  அவரது சக வீரர் யுஜவேந்திர சஹல் 6 இடங்கள் பின்தள்ளப்பட்டு 17-ஆம் இடத்திலும், புவனேஸ்வர் குமார் 18-ஆம் இடத்திலும் உள்ளனர். க்ருணால் பாண்டியா 58-ஆம் இடத்துக்கு முன்னேறினார்.
  பேட்ஸ்மேன்கள்: ரோஹித், ராகுல்
  பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா 7-ஆவது இடத்தில் உள்ளார். இளம் வீரர் கேஎல்.ராகுல் 10-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தவன் 11-ஆவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி நியூஸி தொடரில் ஆடாததால், 4 இடங்கள் தள்ளப்பட்டு 19-ஆம் இடத்தில் உள்ளார்.
  நியூஸிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 12-ஆம் இடத்திலும், ராஸ் டெய்லர் 7 இடங்கள் முன்னேறி 51-ஆம் இடத்திலும், டிம் சைபெஃர்ட் 83-ஆம் இடத்திலும், பந்துவீச்சாளர் டிம் செளதி 30-ஆம் இடத்திலும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai