சுடச்சுட

  


  நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரெய்க் மேக்மில்லன் வரும் மே, ஜூனில் நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு பணி பதவி விலக உள்ளதாக அறிவித்துள்ளார். 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருந்த நிலையில் இதுவே விலக சரியான தருணம் என அவர் கூறியுள்ளார்.


  பெடரேஷன் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் செக்.குடியரசு அணியை 3-2 என்ற ஆட்டக்கணக்கணக்கில் வீழ்த்தியது ருமேனியா. இதன் மூலம் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.


  ஹிஸாரில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் ரயில்வே 4-0 என கர்நாடகத்தை வீழ்த்தியது. ஏனைய ஆட்டங்களில் ஒடிஸா 5-2 என ராஜஸ்தானையும், ஹாக்கி மத்திய பிரதேசம் 1-1 என ம.பி. ஹாக்கி அகாதெமியையும், ஒடிஸா கங்பூர் 2-2 என சத்தீஸ்கரையும்  டிரா செய்தன, உ.பி. அணி 4-2 என ஹிமாச்சலையும், ஜார்க்கண்ட் 2-1 என பஞ்சாபையும் வீழ்த்தின.


  கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய ஆடவர், மகளிர் அணிகள் செஸ் சாம்பியன் போட்டியில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணிகள் தங்கள் பட்டங்களை தக்க வைத்துக் கொண்டன. இந்திய விமான நிலைய ஆணையம், ரயில்வே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றன.


  குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் தொடங்கும் நிலையில் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெவால்-பி.வி.சிந்து ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி பட்டம் வெல்ல முனைந்துள்ளனர். ஆடவர் பிரிவில் சமீர் வர்மா, சாய் பிரணீத், காஷ்யப், லக்ஷயா சென் ஆகியோர் தங்கள் திறமையை பறைசாற்ற உள்ளனர்.


  பாகிஸ்தான் அணியை தலைசிறந்த அணியாக உருவாக்கி, அதன் பின்னர் இந்திய அணியை இருதரப்பு தொடர்களில் ஆட வற்புறுத்துவோம். அதுவரை இருநாட்டு தொடர்களை நடத்த வேண்டும் என கெஞ்ச மாட்டோம் என பிசிபி மேலாண்மை இயக்குநர் வாஸிம் கான் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai