சுடச்சுட

  


  இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி தள்ளாடி வருகிறது.
  மூன்றாவது ஆட்டம், செயின்ட் லூசியாவில் சனிக்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 277 ரன்களை எடுத்தது. அதற்கு பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மே.இ.தீவுகள் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் அபாரமாக பந்துவீசி 41 ரன்களை மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். மொயின் அலி 36 ரன்களை மட்டுமே தந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மே.இ.தீவுகளில் அதிகபட்சமாக ஜான் கேம்ப்பெல்  41 ரன்களையும், ஷேன் டெளரிட்ச் 38 ரன்கûயும் எடுத்தனர். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்திருந்தது. ரோரி பர்ன்ஸ் 10, கீயட்டன் ஜென்னிங்ஸ் 8 ரன்களுடனும் 
  களத்தில் இருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai