சுடச்சுட

  

  இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் அட்டவணையும் ஆட்ட நேரமும்!

  By எழில்  |   Published on : 12th February 2019 01:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  oneday_cup12

   

  நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு உள்ளூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. 

  நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஏற்கஎனவே ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் நியூஸி. 80 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வென்றன. மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து, தொடரையும் 2-1 என கைப்பற்றியது.

  இதையடுத்து அடுத்த வாரம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தொடரின் அட்டவணை:

  டி20 தொடர்

  முதல் டி20 - பிப்ரவரி 24, விசாகப்பட்டினம் (இரவு 7.00 மணி)
  2-வது டி20 - பிப்ரவரி 27, பெங்களூர் (இரவு 7.00 மணி)

  ஒருநாள் தொடர்

  முதல் ஒருநாள் -மார்ச் 2, ஹைதராபாத் (மதியம் 1.30 மணி)
  2-வது ஒருநாள் - மார்ச் 5. நாகபுரி (மதியம் 1.30 மணி)
  3-வது ஒருநாள் - மார்ச் 8, ராஞ்சி (மதியம் 1.30 மணி)
  4-வது ஒருநாள் - மார்ச் 10, சண்டிகர் (மதியம் 1.30 மணி)
  5-வது ஒருநாள் - மார்ச் 13, தில்லி (மதியம் 1.30 மணி)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai