சுடச்சுட

  

  3-வது டெஸ்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து: 448 ரன்கள் முன்னிலை!

  By எழில்  |   Published on : 12th February 2019 10:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  root_wi_2019

   

  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது இங்கிலாந்து அணி.

  செயிண்ட் லுசியாவில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில்,இங்கிலாந்து அணி, 101.5 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பட்லர் 67, ஸ்டோக்ஸ் 79 ரன்கள் எடுத்தார்கள். மே.இ. அணி வீரர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மே.இ. அணி முதல் இன்னிங்ஸில் 47.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிவேகப் பந்துவீச்சு மூலம் பேட்ஸ்மேன்களை வீழ்த்திய மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 123 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-ம் நாளின் முடிவில் அந்த அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்தது.

  3-ம் நாளான நேற்றும் இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காமல் ஆட்டமிழந்தாலும் கேப்டன் ரூட்டும் டென்லியும் அற்புதமான கூட்டணி அமைத்தார்கள். 99 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து டென்லி ஆட்டமிழந்தார். இதன்பிறகு பட்லர், ரூட்டுக்கு நல்ல இணையாக விளங்கினார். அவர் நிதானமாக விளையாடி 115 பந்துகளில் 56 ரன்களுடன் வெளியேறினார். 120 பந்துகளில் அரை சதம்  எடுத்த ரூட் பிறகு 189 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். ரூட்டின் சதத்தால் இந்த டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது. 

  3-ம் நாளின் முடிவில் இங்கிலாந்து அணி 100 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள்  எடுத்துள்ளது. ரூட் 111, ஸ்டோக்ஸ் 29 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 448 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை அடைந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai