Enable Javscript for better performance
ஐசிசி தரவரிசை: ஜெமிமா, ஸ்மிருதி முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    jemima


    ஐசிசி மகளிர் டி20 தரவரிசைப் பட்டியலில்  இந்திய நட்சத்திர வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் அணிகள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் மகளிர் டி20 பேட்ஸ்வுமன் பட்டியலில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா, இரண்டாம் இடத்துக்கும், ஸ்மிருதி மந்தானா 6-ஆம் இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
    நியூஸிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என இந்தியா இழந்தாலும், ஜெமிமா, மந்தானா ஆகியோரின் அபார ஆட்டத்தால் பட்டியலில் முன்னேறியுள்ளனர். 
    சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 10-ஆம் இடத்துக்கும், தீப்தி சர்மா 14-ஆம் இடத்துக்கும், முன்னேறினர்.
    நியூஸிலாந்து அணியில் சோபி டிவைன் 8-ஆம் இடத்திலும், கேப்டன் ஏமி 17-ஆம் இடத்துக்கும் முன்னேறினர். 
    மே.இ.தீவு வீராங்கனை டீன்ட்ரா டாட்டின் ஆல்ரவுண்டர்களில் முதலிடத்தை பெற்றார், அணிகள் பட்டியலில் ஆஸி. முதலிடத்திலும், நியூஸிலாந்து இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. மே.இ.தீவுகள், இந்தியா முறையே 4, 5-ஆம் இடங்களில் உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai