சுடச்சுட

  
  osaka-tennis


  உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒஸாகா தனது பயிற்சியாளர் சாஸ்சா பஜினை விட்டு பிரிந்தார்.
  கடந்த ஆண்டு  யுஎஸ் ஓபனில் இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒஸாகா தற்போது, கடந்த மாதம் ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டி இறுதிச் சுற்றிலும், செக்.குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார். 
  இதன் மூலம் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளார் ஒஸாகா.
  இந்நிலையில் ஆஸி. ஓபன் முடிவுற்ற 17 நாள்களில் ஒஸாகா தனது பயிற்சியாளர் சாஸ்சா பஜினை விட்டு பிரிந்ததாக அறிவித்துள்ளார்.இனிமேல் நான் சாஸ்சாவுடன் இணைந்து பணிபுரிய போவதில்லை. அவருக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.
  இதற்கு பதிலளித்த பஜின் நன்றி நவோமி, சிறப்பாக இருவரும் பயணித்தோம். வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai