தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: இலங்கை அணியை நோகடித்த டிஆர்எஸ் விதிமுறை!

எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் டிஆர்எஸ் சர்ச்சை எதுவும் இல்லாமல் முடிவதில்லை...
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: இலங்கை அணியை நோகடித்த டிஆர்எஸ் விதிமுறை!

எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் டிஆர்எஸ் சர்ச்சை எதுவும் இல்லாமல் முடிவதில்லை.

தென் ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளிலேயே டிஆர்எஸ் சர்ச்சை தொடங்கிவிட்டது.

டர்பனில் தொடங்கியுள்ள இந்த டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரில் ஃபெர்னாண்டோ பந்துவீச்சில்  எல்கர் ரன் எதுவும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப் பந்தில் ஆம்லாவை எல்பிடபிள்யூ செய்ய முயன்றார் ஃபெர்னாண்டோ. ஆனால் அவுட் தர நடுவர் அலீம் டர் மறுத்துவிட்டார். இதையடுத்து டிஆர்எஸ்-ஐப் பயன்படுத்தலாமா என இலங்கை வீரர்கள் ஆலோசனை செய்தார்கள். பிறகு இலங்கை கேப்டன் திம்ருத் கருணாரத்னே டிஆர்எஸ் உதவியை நாடினார். ஆனால், அலீம் டர், குறிப்பிட்ட 15 விநாடிகளைத் தாண்டி முடிவெடுத்ததால் டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த அனுமதி மறுத்தார்.

ஆனால் 13 விநாடிகளுக்குள் முடிவெடுத்திருந்தார் திம்ருத். இதைச் சரியாகக் கவனிக்காத அலீம் டர் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டார். அதேபோல 10 விநாடி ஆன பிறகு, நேரம் நெருங்குவது குறித்து பந்துவீச்சு அணி கேப்டனுக்கு நடுவர்  அறிவுறுத்தவேண்டும் என்றொரு விதிமுறையும் உள்ளது. இதையையும் அலீம் டர் பின்பற்றவில்லை. 

இது சர்ச்சையானதற்குக் காரணமே ஒருவேளை டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் ஆம்லா ஆட்டமிழந்திருப்பார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியும் ஜீரோ ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்திருக்கும். எனினும் சில ஓவர்கள் கழித்து 3 ரன்களில் மெண்டிஸின் அற்புதமான கேட்சினால் ஆட்டமிழந்தார் ஆம்லா. இந்த கேட்சும் முதலில் நடுவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் மூன்றாம்  நடுவரிடம் கொண்டு செல்ல, அதன்பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com