ஆஸி.யுடன் ஒரு நாள், டி20 தொடர்கள்: 15-இல் இந்திய அணி தேர்வு

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணித் தேர்வு மும்பையில் 15-ம் தேதி

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணித் தேர்வு மும்பையில் 15-ம் தேதி நடைபெறுகிறது.
ஆஸி.யில் நடைபெற்ற டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை 2-1 என கைப்பற்றி இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
இதன் தொடர்ச்சியாக ஆஸி. அணி 5 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் இந்தியாவுடன் மோதுகிறது. முதலில் டி20 ஆட்டம் 24-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஒரு நாள் ஆட்டங்களில் முதல் ஆட்டம் மார்ச் 2-இல் ஹைதராபாத்திலும், மார்ச் 5. நாக்பூர், மார்ச். 8-ராஞ்சி, மார்ச். 10-மொஹாலி, மார்ச். 13-தில்லியில் நடக்கின்றன.
இங்கிலாந்தில் நடக்கவுள்ள ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் பிரதிபலிப்பு போன்றே இந்த அணித் தேர்வு அமையவுள்ளது. இதில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. ஒருநாள் அணிக்கு 15 பேருக்கு பதிலாக 16 பேர் அணி தேர்வு செய்யப்படக்கூடும்.
ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு: டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தரப்படும் அதே வேளையில் விராட் கோலி மீண்டும் களமிங்குவார். அதே நேரத்தில் ஒரு நாள் தொடரில் எந்த சோதனையும் மேற்கொள்ளப்படாது. ஒரு நாள் அணியில் இடம் பெறும் வீரர்களுக்கு 15 நாள்கள் முழு ஓய்வு தரப்படுகிறது. ஐந்து ஆட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவர். ஆட்டச்சுமை நிர்வாகம் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டாம் விக்கெட் கீப்பர்: இரண்டாம் விக்கெட் கீப்பர் இடத்துக்கான போட்டியில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் உள்ளனர். மூன்றாம் தொடக்க வீரர் இடத்தையும் நிரப்ப வேண்டியுள்ளது. கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்களில் தவனுக்கு ஓய்வு தரப்பட்டு ராகுல் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.
பும்ரா, புவனேஸ்வர், ஷமி முழு தகுதியுடன் உள்ளனர். கலீல் அகமதுவையும் சேர்த்து நான்கு பேரும் சுழற்சி முறையில் களமிறக்கப்படுவர் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com