ஐபிஎல்: இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டச்சுமையை குறைக்க பிசிசிஐ திட்டம்

ஐபிஎல் 2019 லீக் போட்டிகளின் போது இந்திய பந்துவீச்சாளர்களின் ஆட்டசுமை குறித்து தீவிர கவனம் செலுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
ஐபிஎல்: இந்திய பந்துவீச்சாளர்கள் ஆட்டச்சுமையை குறைக்க பிசிசிஐ திட்டம்


ஐபிஎல் 2019 லீக் போட்டிகளின் போது இந்திய பந்துவீச்சாளர்களின் ஆட்டசுமை குறித்து தீவிர கவனம் செலுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இந்திய அணி கடந்த  2018-தொடக்கத்தில் இருந்து போதிய ஓய்வின்றி, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மற்றும் உள்ளூரில் நடைபெற்ற மே.இ.தீவுகள் தொடர்களில் ஆடியது. இதன் தொடர்ச்சியாக கடந்த நவம்பர் முதல் தொடர்ந்து 80 நாள்கள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் பங்கேற்றது.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை 2-1 என அபாரமாக கைப்பற்றி சாதனை படைத்தது இந்தியா. இதன் தொடர்ச்சியாக நியூஸிலாந்திலும் ஒரு நாள் தொடரை 4-1 என கைப்பற்றியது. டி20 தொடரை இழந்தது. 
ஆஸி. டெஸ்ட் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஆகியோர் கொண்ட மும்முர்த்திகள் அணி அபாரமாக பந்துவீசி, ஆஸி. அணியை கலங்கடித்தனர். இதன் பின் ஒரு நாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டு விட்டது.
அதே போல் நியூஸிலாந்து தொடரிலும் ஒரு நாள் ஆட்டங்களில் ஆடிய முகமது சமிக்கு டி20 தொடரில் ஓய்வு தரப்பட்டது. 
தற்போது வரும் 24-ஆம் தேதி முதல் இந்தியாவில் நடக்கவுள்ள 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் ஆடவுள்ளது ஆஸி. அணி. இதற்கான அணியை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
உலகக் கோப்பை கிரிக்கெட்: வரும் மே.ஜுன் மாதம் இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. அதற்காக இந்திய அணியை தயார்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு முன்பு மார்ச், முதல் ஏப்ரல் மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடக்கவுள்ளன.
அதில் இந்திய மற்றும் அயல்நாட்டு வீரர்களும் பங்கேற்று ஆட உள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து உலகக் கோப்பைக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஸ்வர், முகமது ஷமி ஆகியோர் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.இங்கிலாந்து மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக உள்ளவை.
ஆட்டச்சுமை: பந்துவீச்சாளர்களின் ஆட்டச்சுமை குறித்து கவனம் செலுத்த உள்ளதாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஐபிஎல்ல்லில் எவ்வளவு உகந்த ஆட்டங்களை பந்துவீச்சாளர்கள் ஆட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்துவோம். இதுதொடர்பாக அணிகளின் உரிமையாளர்கள், கேப்டன்களிடம் பேச்சு நடத்தப்படும்.
அவர்களது பார்ம், உடல்தகுதி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராகும் வகையில் ஓய்வு தரப்படும்.  ஐபிஎல் போட்டி முடிந்த பின்னரும் 10 நாள்கள் உள்ளன. அப்போது அவர்களது திறமையை மெருகேற்ற பயிற்சி மேற்கொள்ளப்படும். இதில் அளவுக்கு மீறி நாங்கள் தலையிடா விட்டாலும், 
பந்துவீச்சாளர்களுக்கு முழு ஓய்வு, உடல்தகுதி பராமரிப்பதை உறுதி செய்வோம் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com