டேபிள் டென்னிஸ் சூப்பர் லீக் 22-இல் தொடக்கம்

தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சம்மேளனம், இன்டஸ் ஸ்போர்ட்ஸ் லீக் சார்பில் இரண்டாவது டிடிஎஸ்எல் 2019 போட்டிகள் வரும் 22 முதல் 24-ஆம் தேதி வரை
தமிழ்நாடு டேபிள்டென்னிஸ் லீக் 2019 அறிமுக விழாவில் பங்கேற்ற முன்னணி இந்திய வீரர்கள் சத்யன், சுப்பிரமணியம் ராமன் மற்றும் சம்மேளன நிர்வாகிகள்.
தமிழ்நாடு டேபிள்டென்னிஸ் லீக் 2019 அறிமுக விழாவில் பங்கேற்ற முன்னணி இந்திய வீரர்கள் சத்யன், சுப்பிரமணியம் ராமன் மற்றும் சம்மேளன நிர்வாகிகள்.


தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சம்மேளனம், இன்டஸ் ஸ்போர்ட்ஸ் லீக் சார்பில் இரண்டாவது டிடிஎஸ்எல் 2019 போட்டிகள் வரும் 22 முதல் 24-ஆம் தேதி வரை சென்னை அண்ணாநகர் வி.ஆர். மைதானத்தில் நடைபெறுகிறது.
தமிழகத்தின் சிறந்த டேபிள் டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள் இடம் பெறும் இந்த லீக் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 3 நாள் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தை இந்திய வீரர்கள் சத்யன் ஞானசேகரன், சுப்பிரமணியன் ராமன் துவக்கி வைத்தனர். தொழில்நுட்ப குழு, டிஎன்டிடிஏ அமைப்பு குழுவினர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
மொத்தம் 60 பேர் ஆடவர், மகளிர், ஜூனியர் மகளிர், ஆடவர், கேடட் சிறுவர், மூத்தோர் என 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 8 அணிகளின் உரிமையாளர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிகபட்சமாக ராஜேஷ் ரூ.60 ஆயிரம், நிதின் திருவேங்கடம் ரூ.58 ஆயிரம், மகளிர் பிரிவில் ரீத் ரிஷ்யா ரூ.33 ஆயிரம், செரஹா ஜேக்கப் ரூ.32 ஆயிரம், ஜூனியர் சிறுமியரில் சர்மிதா (ரூ.31 ஆயிரம், கௌசிகா ரூ.25 ஆயிரம், கேடட் பிரிவில் பாலமுருகன் ரூ.29 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
8 அணிகள் 4 அணிகள் கொண்ட 2 குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதில் வெல்லும் அணிகள் இறுதிக்கு முன்னேறும்.
குழு அளவில் 9 ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் ஆடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com