தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 4-ஆவது சுற்றில் லக்ஷயா சென், ஹர்ஷீல்

தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், ஹர்ஷீல் டானி ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.


தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், ஹர்ஷீல் டானி ஆகியோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் புதன்கிழமை இந்த ஆட்டம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்றவரான லக்ஷயா சென்,  தன்னை எதிர்த்து விளையாடிய விபுல் சைனியை 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
22 வயது ஹர்ஷீல் டானி, போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள பால்ராஜ் கஜிலாவை 21-14, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 
முன்னாள் சீனியர் சாம்பியன்களான சௌரவ் வர்மா, ரிதுபர்னா தாஸ் ஆகியோரும் 4ஆவது சுற்றுக்கு முன்னேறினர். அரிந்தப் தாஸ்குப்தா, ராகுல் யாதவ், ஜஸ்வந்த், நிகில்ஷியாம் ஸ்ரீராம், அலாப் மிஸ்ரா உள்ளிட்டோரும் 4ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், பி.வி.சிந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தின் மகள் காயத்ரி கோபிசந்த்,  ரியா முகர்ஜி, மாளவிகா பன்சோத், ஷிகா கௌதம், நமிதா பதானியா, ரேஷ்மா கார்த்திக், நேஹா பண்டிட் உள்ளிட்டோரும் அடுத்த சுற்றுக்கு தேர்வாகினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com