இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு?

நாக்பூரில் நடைபெற்று வரும் இரானி கோப்பைக்கான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது.
இரானி கோப்பை : ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பு?


நாக்பூரில் நடைபெற்று வரும் இரானி கோப்பைக்கான ஆட்டத்தில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது.
ரஞ்சி சாம்பியன் விதர்பா-ரெஸ்ட் ஆஃப் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை குவித்தது. பதிலடியாக விதர்பா அணியும் முதல் இன்னிங்ஸில் 425 ரன்களை எடுத்தது.
இதன் தொடர்ச்சியாக ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 107 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 374 ரன்களை குவித்தது. ஹனுமா விஹாரி 4 சிக்ஸர், 19 பவுண்டரியுடன் 301 பந்துகளில் 180 ரன்களை குவித்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
ரஹானே, ஷிரேயஸ் ஐயர் ஆகியோர் தங்கள் பங்குக்கு 87, 61ரன்களை விளாசினர்.
விதர்பாவுக்கு 243 ரன்கள் தேவை: தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய விதர்பா அணி நான்காம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 37 ரன்களை எடுத்துள்ளது. சஞ்சய் ரகுநாத் 17, அதர்வா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஹனுமா விஹாரி முதல் இன்னிங்ஸிலும் 114 ரன்களை விளாசி இருந்தார். கடந்த 2018 இரானி கோப்பையிலும் ஹனுமா 183 ரன்களை எடுத்திருந்தார். 
ஒரு நாளே உள்ள நிலையில் விதர்பா அணி வெற்றி பெற 243 ரன்கள் தேவைப்படுகிறது. 9 விக்கெட்டுகள் கையில் உள்ளன.
இங்கிலாந்து லயன்ஸ் தோல்வி:இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையே மைசூருவில் நடைபெற்ற இரண்டாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணி வென்றது.
ஏ அணி முதல் இன்னிங்ஸில் 392 ரன்களை சேர்த்தது.  இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய ஏ அணி வீரர் மயங்க் மார்கண்டே அற்புதமாக பந்துவீசி 5-31 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com