புரோ வாலிபால் லீக் சென்னை பிரிவு போட்டிகள் இன்று தொடக்கம்: 22-இல் ஆல் ஸ்டார் மகளிர் போட்டி

ருபே புரோ வாலிபால் லீக் போட்டியின் சென்னை பிரிவு ஆட்டங்கள் சனிக்கிழமை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்குகின்றன.
புரோ வாலிபால் லீக் சென்னை பிரிவு போட்டிகள் இன்று தொடக்கம்: 22-இல் ஆல் ஸ்டார் மகளிர் போட்டி


ருபே புரோ வாலிபால் லீக் போட்டியின் சென்னை பிரிவு ஆட்டங்கள் சனிக்கிழமை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்குகின்றன.
புரோ வாலிபால் லீகில் மொத்தம் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கொச்சியில் தொடங்கிய முதல் கட்ட ஆட்டங்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றன. அதில் கொச்சி, காலிக்கட்அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. பிளாக் ஹாக்கர்ஸ் ஹைதராபாத் அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 
சென்னை பிரிவு போட்டிகளில் உள்ளூர் அணியான சென்னை ஸ்பார்டன்ஸ், யு மும்பா வாலி அணிகள் மோதவுள்ளன. 
சனிக்கிழமை முதல் ஆட்டம் நடக்கிறது. அரையிறுதியில் இடம் பெறும் கடைசி அணி இதில் இருந்து தேர்வு பெறும். 
புரோ வாலிபால் லீகின் மொத்தம் 18 ஆட்டங்களில் கொச்சியில் 12 ஆட்டங்கள் நடைபெற்றன. மீதமுள்ள 2 லீக் ஆட்டங்கள், 2 அரையிறுதி,  இறுதி ஆட்டங்கள் சென்னையில் நடக்கின்றன.
இதுதொடர்பாக இந்திய வாலிபால் சம்மேளன பொதுச் செயலாளர் ராம் அவதார் சிங், பிவிஎல் சிஇஓ ஜாய் பட்டாச்சார்யா ஆகியோர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புரோ வாலிபால் லீக் போட்டியின் முதல் சீசனுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. கொச்சியில் நடைபெற்ற அனைத்து ஆட்டங்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது. டிக்கெட் வசூலும் நன்றாக இருந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அயல்நாட்டு வீரர்களுடன் ஆடியது நமது வீரர்களுக்கு சிறந்த அனுபவமாக அமைந்தது.
வரும் பிவிஎல் சீசன்களில் மேலும் சிறந்த அயல்நாட்டு வீரர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும்.
மகளிர் பிரிவிலும் லீக் ஆட்டங்கள் தொடங்கும் முன்னோட்டமாக, வரும் 22-ஆம் தேதி ஆல் ஸ்டார் அணிகள் என எல்லோ, புளு அணிகள் ஆடும் காட்சிப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் அலெக்சா ஸ்ட்ரேஞ்ச், மரினா ஸ்வெட்டநோவா போன்ற சர்வதேச வாலிபால் நட்சத்திரங்கள் உள்பட இந்திய வீராங்கனைகளும் ஆடுகின்றனர். 
பீச் வாலிபால் குறித்த லீக் போட்டிகளும் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com