தேசிய சீனியர் பாட்மிண்டன்: சாய்னா நெவால், செளரவ் வர்மாவுக்கு சாம்பியன் பட்டம்

தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செளரவ் வர்மாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தேசிய சீனியர் பாட்மிண்டன்: சாய்னா நெவால், செளரவ் வர்மாவுக்கு சாம்பியன் பட்டம்

தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் செளரவ் வர்மாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
 குவாஹாட்டியில் 83-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிர் பிரிவில் வைரிகளான சாய்னா நெவால்-பி.வி.சிந்து ஆகியோர் மோதினர். பரபரப்பாக அனலைக் கிளப்பும் ஆட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் சாய்னா முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். தனது வலுவான ஷாட்களால் சிந்துவை திணறடித்தார். இறுதியில் 21-18, 21-15 என்ற கேம் கணக்கில் அபார வெற்றி பெற்று தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். சாய்னாவுக்கு இது நான்காவது தேசிய சாம்பியன் பட்டமாகும்.
 செளரவ் வர்மா சாம்பியன்: ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் முன்னாள் சாம்பியன் செளரவ் வர்மாவும்-ஆசிய ஜூனியர் சாம்பியன் லக்ஷயா சென்னும் மோதினர். இந்த ஆட்டமும் ஒருதலைபட்சமாகவே அமைந்தது. செளரவ்வர்மா தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் 21-18, 21-13 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் மூன்றாவது தேசிய சாம்பியன் பட்டமாகும்.
 இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி-சிராக் ஷெட்டி இணை 21-13, 22-20 என அர்ஜுன் எம்.ஆர்-ஷிலோக் ராமச்சந்திரன் இணையை வென்று பட்டம் வென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com