கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மையத்தில் இம்ரான் கான் படம் அகற்றம்

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பையில் உள்ள பழமையான கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மையத்தில் இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் படம் அகற்றப்பட்டது.

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பையில் உள்ள பழமையான கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா மையத்தில் இருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் படம் அகற்றப்பட்டது.
 கடந்த 14-ஆம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் படம், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் வைக்கப்பட்டிருந்தது.
 இத்தாக்குதல் சம்பவத்தால் நாடு முழுவதும் கொதிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனநிலை பிரதிபலிக்கும் வகையில் சிசிஐ கிளப்பில் இருந்த இம்ரான் கான் படத்தை நிர்வாகிகள் அகற்றி விட்டனர்.
 பாக். வீரர்கள் படங்களும் நீக்கம்:
 மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம் பெற்றிருந்த பாக். வீரர்களின் படங்களும் நீக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மைதானத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 15 பாக். வீரர்களின் படங்கள்
 அகற்றப்பட்டன.
 பிரதமர் இம்ரான் கான், அப்ரிடி, ஜாவேத் மியான்டட், வாசிம் அக்ரம் படங்களும் இதில் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com