தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே மகளிர் அணி.
சாம்பியன் பட்டம் வென்ற ரயில்வே மகளிர் அணி.


தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் நடைபெற்று வந்த இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு ரயில்வே, மத்திய பிரதேச அணிகள் தகுதி பெற்றன. 
மாலையில் நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் தொடக்கம் முதலே ரயில்வே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீராங்கனைகள் பலர் இடம் பெற்ற அந்த அணியின் ஆட்டத்துக்கு ம.பி. அணியால் ஈடுகொடுக்கமுடியவில்லை.
கோல் மழை:
10-ஆம் நிமிடத்திலேயே வந்தனா கட்டாரியா முதல் கோலை அடித்தார். 12, 16-ஆவது நிமிடங்களில் நேஹா அடுத்தடுத்து கோல்களையும், பின்னர் நவ்நீத் கெளர் 25, 28-ஆம் நிமிடங்களிலும் இரண்டு கோல்களை அடித்தனர். இறுதியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது ரயில்வே.
முன்னதாக  திங்கள்கிழமை காலை நடைபெற்ற மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் ஹரியாணா அணி 3-2 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது.
ஹரியாணா அணியில் சோனிகா, ராணி, தீபிகா ஆகியோரும், மகாராஷ்டிரா தரப்பில் லால்ரெட்டிலும் கோலடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com