செய்திகள் சில வரிகளில்...
By DIN | Published On : 20th February 2019 12:49 AM | Last Updated : 20th February 2019 12:49 AM | அ+அ அ- |

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ரஞ்சி அணிகளுக்கும் ஓரே வகையிலான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில பயிற்றுநர்களும் வீரர்களின் உடல்தகுதியை கருதி, தேசிய அணிக்கு அளிக்கப்படும் ஓரே வகையான பயிற்சியை பின்பற்ற வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, ஐ லீக் அணிகளில் ஒன்றான ரியல் காஷ்மீர் அணியுடன் ஸ்ரீநகரில் ஆட்டமாட்டோம் என மினர்வா, ஈஸ்ட்பெங்கால் அணிகள் கூறியுள்ள நிலையில், ஐஎஸ்எல் அணியான பெங்களூரு எஃப்சி, மார்ச் மாதம் ஸ்ரீநகரில் ரியல் காஷ்மீருடன் காட்சிப் போட்டியில் ஆட சம்மதம் தெரிவித்துள்ளது.
வரும் 2032 ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தோனேஷியா முறைப்படி விண்ணப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து நாடுகளுக்கு இடையிலான முழுமையான கிரிக்கெட் தொடர் வரும் பிப். 21-ஆம் தேதி முதல் மார்ச் 19-ஆம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறுகிறது. இதில் 3 டி20, 5 ஒருநாள், 1 டெஸ்ட் ஆட்டங்கள் இடம்பெறும்.