ஜோகோவிச், சைன் பைல்ஸ் ஆகியோருக்கு லாரஸ் விளையாட்டு விருது

லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ்  ஆகியோருக்கு
லாரஸ் ஆண்டின் சிறந்த விளையாட்டு விருதுடன் ஜோகோவிச், சைமன் பைல்ஸ்.
லாரஸ் ஆண்டின் சிறந்த விளையாட்டு விருதுடன் ஜோகோவிச், சைமன் பைல்ஸ்.


லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சைமன் பைல்ஸ்  ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் லாரஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் விளையாட்டுத் துறையின் ஆஸ்கர் விருதுகள் என்ற பெயர் பெற்றவை. மொனாக்கோவில் திங்கள்கிழமை இரவு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சிறந்த விளையாட்டு வீரர்-நோவக் ஜோகோவிச் (செர்பியா, டென்னிஸ்),
சிறந்த விளையாட்டு வீராங்கனை-சைமன் பைல்ஸ் (அமெரிக்கா, ஜிம்னாஸ்டிக்ஸ்).
ஆண்டின் எதிர்பாராத திருப்புமுனை-நவோமி ஒஸாகா (ஜப்பான், டென்னிஸ்).
மீண்டு வந்த வீரர்-டைகர் வுட்ஸ் (அமெரிக்கா, கோல்ஃப்).
ஆண்டின் சிறந்த அணி-பிரான்ஸ் கால்பந்து அணி (பிஃபா உலக சாம்பியன்).
சிறந்த செயல்திறன் மிக்க வீரர்-சோ கிம் (அமெரிக்கா, ஸ்னோபோர்டிங்).
சிறந்த மாற்றுத்திறனாளி வீரர்-ஹென்ரைட்டா பார்ஸ்கோவா (ஸ்லோவோக்கியா, மலையேறும் வீராங்கனை).
வாழ்நாள் சாதனையாளர் விருது-ஆர்சென் வெங்கர் (பிரான்ஸ், கால்பந்து).
விதிவிலக்கு சாதனை விருது-எய்ட் கிப்சோ (கென்யா, மாரத்தான்)
சிறந்த விளையாட்டு தொண்டு நிறுவனம்-யுவா (இந்தியா).
ஜோகோவிச்சுக்கு நான்காவது விருது
15 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், பிரபல வீரர்கள் கிளியன் மாப்பே, எயிட் கிப்சோஜ், லெப்ரான் ஜேம்ஸ், ஆகியோர் அளித்த கடும் போட்டியை மீறி விருதை வென்றார். முழங்கை காயம் காரணமாக பல மாதங்கள் ஆட முடியாமல் இருந்த ஜோகோவிச், கடந்த விம்பிள்டன், யுஎஸ் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் வாகை சூடியது குறிப்பிடத்தக்கது. இது அவர் வெல்லும் நான்காவது லாரஸ் விருதாகும்.
சைமன் பைல்ஸ்க்கு இரண்டாவது விருது
அமெரிக்க ஜிம்னாஸ்க் வீராங்கனை சைமன்ஸ் பைல்ஸ் ஏற்கெனவே 2017-இல் லாரஸ் விருதை வென்றுள்ளார். கடந்த 2018 உலக சாம்பியன் போட்டியில் 4 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்ற பைல்ஸ் ஒட்டுமொத்தமாக 14 உலக பட்டங்களை வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com