உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்குத் தடை விதிக்க வேண்டும்: ஐசிசிக்குக் கடிதம் எழுதவுள்ள பிசிசிஐ!

வினோத் ராயின் கோரிக்கை குறித்து வெள்ளியன்று நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என...
உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்குத் தடை விதிக்க வேண்டும்: ஐசிசிக்குக் கடிதம் எழுதவுள்ள பிசிசிஐ!

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் பேருந்தின் மீது வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். புல்வாமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 40 வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் சமீபத்திய காஷ்மீர் தற்கொலைப்படைத் தாக்குதலையடுத்து இந்த ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசின் முடிவைப் பொறுத்தே இந்த ஆட்டம் நடைபெறுமா இல்லையா என்று சொல்லமுடியும் என ஐபில் தலைவர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை முன்வைத்து உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பாகிஸ்தானை அப்புறப்படுத்தவேண்டும் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதவுள்ளது. நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜொஹ்ரிக்கு இதுகுறித்து தனிப்பட்டமுறையில் கடிதம் எழுதியுள்ளார். தொடர் தீவிரவாதச் செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதால் பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கவேண்டும் என்று பிசிசிஐ ஐசிசிக்குக் கடிதம் எழுதவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

வினோத் ராயின் கோரிக்கை குறித்து வெள்ளியன்று நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com