சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கெய்ல் நிகழ்த்திய புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸருடன் 3-வது இடத்திலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 287 சிக்ஸருடன் இரண்டாம் இடத்திலும்...
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்: கெய்ல் நிகழ்த்திய புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில்.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து - மே.இ. அணிகள் ஒருநாள் ஆட்டத்துக்கு முன்பு பாகிஸ்தானின் சாஹித் அஃப்ரிடி 476 சிக்ஸர் அடித்து முதல் இடத்தில் இருந்தார். அதற்கடுத்த இடத்தில் இருந்தார் கெயில். 

நேற்றைய ஆட்டத்தில், 129 பந்துகளில் 12 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் எடுத்தார் கெயில். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20) 488 சிக்ஸருடன் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்

கெயில் - 488
அஃப்ரிடி - 476
மெக்கல்லம் - 398

டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 சிக்ஸருடன் 3-வது இடத்திலும் (மெக்கல்லம் 107 சிக்ஸருடன் முதல் இடத்தில்), ஒருநாள் கிரிக்கெட்டில் 287 சிக்ஸருடன் இரண்டாம் இடத்திலும் (அஃப்ரிடி 351 சிக்ஸருடன் முதல் இடத்தில்), டி20 கிரிக்கெட்டில் 103 சிக்ஸருடன் முதல் இடத்திலும் (கப்திலும் 103 சிக்ஸருடன் முதல் இடத்தில்) உள்ளார் கெயில். 

மேலும் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சிக்ஸர் அடித்துள்ளார் கெயில். வேறு எந்த வீரரும் ஒருநாட்டுக்கு எதிராக இதுபோல 100 சிக்ஸர் அடித்ததில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com