அசத்தலான பந்துவீச்சால் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது...
அசத்தலான பந்துவீச்சால் முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி!

மும்பையில் நடைபெற்ற இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய தொடக்க வீராங்கனை ரோட்ரிகஸ் சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்தார். ஆனால் மிதாலி ராஜ் தவிர இதர நடுவரிசை வீராங்கனைகள் சரியாக விளையாடாததால் ஒருகட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 95 எனப் பரிதாபமாகக் காட்சியளித்தது இந்திய அணி. பிறகு, மிதாலி ராஜுக்கு பாட்டியா, கோஸ்வாமி ஆகியோர் நல்ல இணைகளாக விளங்கினார்கள். மிதாலி 74 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 49.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த இலக்கை இங்கிலாந்து மகளிர் அணி எட்டிவிடும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிஸ்ட், சர்மா, பாண்டே ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகளால் இங்கிலாந்து அணி நிலைகுலைந்தது. நதாலி சிவர் 44 ரன்களும் கேப்டன் நைட் 39 ரன்களும் எடுத்தார்கள். ஒருகட்டத்தில் 31-வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது இங்கிலாந்து அணி. ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சால் அடுத்து வந்த வீராங்கனைகளால் தாக்குப்பிடிக்கமுடியாமல் போனது. இதனால் இங்கிலாந்து மகளிர் அணி, 41 ஓவர்களில் 136 ரன்களுக்குச் சுருண்டது.  

முதல் ஒருநாள் ஆட்டத்தை 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. திங்கள் அன்று 2-வது ஒருநாள் ஆட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com