2ஆவது ஒரு நாள் ஆட்டம்: மே.இ.தீவுகள் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்படாஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 289 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களில் ஆட்டமிழந்தது.
3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் பரிகொடுத்த இங்கிலாந்து அணி, கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com