துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா உலக சாதனை!

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டியில்  10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.
252.9 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்பு சீனாவின் ஷாவ் ரௌஜு 252.4 புள்ளிகள் பெற்றிருந்ததே உலக சாதனையாக இருந்தது.
தில்லியில் கடந்த 20ஆம் தொடங்கிய உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 252.9 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் அபூர்வி. 
தகுதிச் சுற்றில் 629.3 புள்ளிகள் எடுத்து 4ஆவது இடத்தில் இருந்த அபூர்வி, இறுதிச்சுற்று ஆட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சீன வீராங்கனை ஷாவ் ரௌஜு 251.8 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மற்றொரு சீன வீராங்கனை ஜு ஹாங் 230.4 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.
வெற்றி பெற்றது குறித்து 26 வயது அபூர்வி கூறுகையில், "இறுதி ஆட்டம் கொஞ்சம் கடினமாக இருந்தது. நீண்ட காலமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். இதற்கான பலன் எனக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். உள்ளூர் மக்களின் ஆதரவு என்னை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. ஜப்பானின் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு' என்றார்.
அபூர்வி ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கெனவே தேர்வாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் (ஆடவர் பிரிவு), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (ஆடவர் பிரிவு), 25 மீட்டர் பிஸ்டல் (மகளிர் பிரிவு) இறுதிச்சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com