தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இலங்கை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் இதற்கு முன்பு எந்தவொரு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணியும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதில்லை.
2 டெஸ்ட் , 5 ஒரு நாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது இலங்கை அணி.
கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்நிலையில், 2 ஆவது டெஸ்ட் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை போர்ட் எலிசபெத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ ஆடிய இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 37.4 ஓவர்களில் 154 ரன்களில் சுருண்டது. 
68 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ûஸ ஆடிய தென்னாப்பிரிக்கா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதைடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 84 ரன்களும், ஃபெர்னாண்டோ 75 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா, ஆலிவியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக குசல் மென்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் ஆட்டம் மார்ச் 3ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com