பாக். அணியுடன் விளையாடும் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை மதிப்போம்: விராட் கோலி

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதா? வேண்டாமா? என்பதில் மத்திய அரசு எடுக்கும் முடிவை மதித்துச் செயல்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலி தெரிவித்தார்.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வதா? வேண்டாமா? என்பதில் மத்திய அரசு எடுக்கும் முடிவை மதித்துச் செயல்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன்  விராட் கோலி தெரிவித்தார்.
இந்திய அணியுடன் 2 டி20, 5 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. முதல் டி20 ஆட்டம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:
உலகக் கோப்பை தொடரில் ஜூன் 16ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுவதா? அல்லது வேண்டாமா? என்பதில் மத்திய அரசும், பிசிசிஐ நிர்வாகமும் என்ன முடிவு எடுக்கிறதோ அதை மதித்துச் செயல்படுவோம். அதுதான் எங்களின் நிலைப்பாடு. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். புல்வாமா தாக்குதல் குறித்து கேள்விப்பட்டு இந்திய அணி அதிர்ச்சி அடைந்தது என்றார் கோலி.
இந்த விவகாரத்தில் மத்திய அரசும், பிசிசிஐ அமைப்பும் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே பின்பற்றுவோம் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணியுடன் விளையாடுவது குறித்து கோலி கூறுகையில், "உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ளதால் அதற்கு முன்பு டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்கு பதிலாக அதிக ஒரு நாள் ஆட்டங்களில் விளாயாடினால் பொறுத்தமாக இருந்திருக்கும். மயங்க் மார்கண்டே சிறப்பாக விளையாடியதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐபிஎல் போட்டித் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் பயிற்சித் திட்டங்களை சரியாக வகுத்துக் கொள்ள வேண்டும். உலகக் கோப்பையில் அணிக்காக விளையாட உள்ள வீரர்கள் பணிச்சுமையை சிறப்பாக கையாள வேண்டும். நம்பிக்கையும், மனதில் மகிழ்ச்சியும் கொண்டுள்ள 15 வீரர்களே இந்திய அணிக்காக உலகக் கோப்பை தொடரில் விளையாட தேவை' என்றார்.
ஆஸ்திரேலிய அணியுடனான 20 ஓவர், ஒரு நாள் ஆட்டங்களே உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச கிரிக்கெட் ஆட்டமாகும்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com