இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் அந்த அணியால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தமுடியவில்லை. 43.3 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நதாலி சிவெர் பிரமாதமாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார். இதர வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். 119 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தனி வீராங்கனையாகப் போராடி அணியின் ஸ்கோரை 161 ரன்கள் வரை கொண்டு சென்றார் சிவெர். இந்தியத் தரப்பில் கோஸ்வாமியும் ஷிகா பாண்டேவும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இதையடுத்து விளையாடிய இந்திய மகளிர் அணி, 41.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீராங்கனை மந்தனா 74 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். மிதாலி ராஜ் 47 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இங்கிலாந்துக்கு எதிராக முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிரணி அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. மூன்றாவது ஒருநாள் ஆட்டம் வியாழன் அன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com