இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்வோம்: மிதாலி ராஜ் நம்பிக்கை

உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுவோம் என இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வெல்வோம்: மிதாலி ராஜ் நம்பிக்கை

உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுவோம் என இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஷிப் ஒரு பகுதியாக இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இதன் தொடர்ச்சியாக 2-ஆவது ஆட்டம் திங்கள்கிழமை மும்பையில் நடக்கிறது. முதல் வெற்றி இந்திய அணியினருக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. தொடரை வென்றால் 2021 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடி தகுதி பெற ஏதுவாக இருக்கும்.
வரும் 2020 வரை தரவரிசையில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். இரண்டாவது ஆட்டத்திலும் பெறும் வெற்றி மிகுந்த ஊக்கத்தை தரும். முந்தைய ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஏக்தா பிஷ்ட் சிறப்பாக பந்துவீசினார்.
ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே ஆகியோரும் எதிரணியை கட்டுப்படுத்தினர்.
இந்திய பேட்டிங்கில் முதல் ஆட்டத்தில் ஜெமிமா, மிதாலி, ஆகியோர் ரன்களை குவித்தனர். தனியா பாட்டியா, கோஸ்வாமி ஆகியோரும் ஒரளவு ரன்களை சேகரித்தனர். ஸ்மிருதி மந்தானா மட்டுமே சரிவர ஆடவில்லை.
அதே நேரத்தில் இங்கிலாந்து பேட்டிங் மிடில் ஆர்டரில் பாதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ஹீதர் நைட் மட்டுமே சிறப்பாக ஆடினார். இரண்டாவது ஆட்டத்தில் டேனி வயாட், சாரா டெய்லர், பீமெளன்ட் ஆகியோர் ஆடுவர் என எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் பந்துவீச்சு ஷிவர், சோபி, ஜார்ஜியா, அன்யா ஷுருப்úஸால் ஆகியோர் சிறப்பாகவே செயல்படுகின்றனர். 
இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் வெல்லும் தீவிரத்தில் உள்ளது இந்திய அணி. 
இதுதொடர்பாக கேப்டன் மிதாலி ராஜ் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றி நேரடியாக உலகக் கோப்பை 2021-க்கு தகுதி பெறுவதே முக்கியம். மேலும் இந்திய அணியில் அதிக இணைகள் தேவைப்படுகின்றன. தொடக்க வரிசை மற்றும் நானும், தனியா பாட்டியா என 2 இணைகளே ஆடுகிறோம். மிடில் ஆர்டரில் பேட்டிங்கை பலமாக்க வேண்டும். 200 ரன்களுக்கு மேல் ஸ்கோரை பெறும் நாம் 2 இணைகளோடு, மேலும் சிலர் நன்றாக பேட்டிங் செய்தால் கூடுதல் ரன்களை சேர்க்கலாம். ஜெமிமா-ஸ்மிருதி இணை சிறப்பாக தொடக்கத்தை தருகிறது. ஷிகா பாண்டேயும் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றார் மிதாலி.
இங்கிலாந்து பந்துவீச்சாளர் அன்யா ஷுருப்சோல் கூறியதாவது:
எங்கள் அணியால் மீண்டும் எழுச்சி பெற முடியும். இதற்கான தகுதி உள்ளது. தோல்வியுறும் நேரங்களில் இருந்து மீண்டும் வெற்றியை ஈட்டியுள்ளோம். இந்த தொடரிலும் நாங்கள் மீண்டு எழுவோம். நாங்கள் சிறப்பாகவே பந்துவீசி, பீல்டிங் செய்தோம். இந்தியா சிறப்பான சுழற்பந்துவீச்சை பெற்றுள்ளது. அதை சமாளித்து ஆடுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com