முகப்பு விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கத்துடன் நிறைவு செய்தது இந்தியா
By DIN | Published On : 28th February 2019 01:02 AM | Last Updated : 28th February 2019 01:02 AM | அ+அ அ- |

தங்கம் வென்ற சௌரவ் சௌதரி, மானு பேக்கர்.
தில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற குழு பிரிவு இறுதிச் சுற்றில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சௌரவ் சௌதரி, மானு பேக்கர் இணை 483.5 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றது. இந்தப் போட்டியில் சீன இணை வெள்ளியும் (477.7 புள்ளிகள்), கொரிய இணை வெண்கலமும் (418.8) வென்றன.
10 மீட்டர் ஏர் ரைஃபிள் குழு பிரிவில், இந்தியாவின் ரவி குமார், அஞ்சும் முட்கில் இணையும், அபூர்வி சந்தேலா, தீபக் குமார் இணையும் முறையே 7 மற்றும் 25ஆவது இடங்களை பிடித்தன.
இந்தியாவும் (3 தங்கம்), ஹங்கேரியும் (3 தங்கம்) முதலிடம் பெற்றன. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட இந்தப் போட்டியில் 14 இடங்கள் ஒதுக்கீடு செய்யபப்ட்டிருந்தன.
எனினும், இந்தியா சார்பில் சௌரவ் சௌதரி மட்டுமே ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானார்.