இப்படியொரு அவுட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (விடியோ)

இதனால் குழம்பிப் போன நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் ஆலோசனை கேட்டார்கள்...
இப்படியொரு அவுட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (விடியோ)

ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட்டில் விநோதமான டிஸ்மிஸல் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் டிரம்மோய்ன் நகரில் நியூஸிலாந்து மகளிர் மற்றும் கவர்னர் ஜெனரல் லெவன் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து மகளிர் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் கேட்டீ பெர்கின்ஸ் விநோதமான முறையில் பந்துவீசிய கிரஹாமிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதுவும் எப்படி?

கிரஹாம் வீசிய பந்தை ஓங்கி நேராக அடித்தார் பெர்கின்ஸ். ஆனால் பந்தோ நேராக மறுமுனையில் இருந்த கேத்தே மார்டினின் மட்டையில் பட்டு எகிறியது. உடனே அருகில் இருந்த பந்துவீச்சாளர் கிரஹாம் அதை கேட்ச் பிடித்தார். வழக்கமாக மறுமுனையில் பேட்டில் படும் பந்து மேலே எழும்பிச் செல்வது அபூர்வமாகவே நடக்கும். அப்படியே நடந்தாலும் அது கேட்சாக மாறுவது எப்போதும் நடக்காது. ஆனால் இந்த நிகழ்வில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. எனினும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஆஸி. வீரர் சிமண்ட்ஸ் அடித்த பந்து மறுமுனையில் இருந்த வீரரின் காலில் பட்டு மேலே எழும்பி கேட்சாக மாறியது. அதுபோன்ற ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

பெர்கின்ஸின் ஆட்டமிழப்பு குறித்து குழம்பிப் போன நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் ஆலோசனை கேட்டார்கள். அதன்பிறகே பெர்கின்ஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த டிஸ்மிஸலின் விடியோ சமூகவலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com