இங்கிலாந்தில் நீக்கப்பட்ட பிறகு மீண்டெழுந்து வந்த புஜாரா: ஒரே நாளில் சிட்னியில் நிகழ்த்திய சாதனைகள்!

இந்தத் தொடரில் நான்காவது முறையாக 200 பந்துகளுக்கும் அதிகமாக எதிர்கொண்டுள்ளார்...
இங்கிலாந்தில் நீக்கப்பட்ட பிறகு மீண்டெழுந்து வந்த புஜாரா: ஒரே நாளில் சிட்னியில் நிகழ்த்திய சாதனைகள்!

ஆஸ்திரேலியாவிலும் விராட் கோலி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடகடவென மூன்று சதங்கள் அடித்துவிட்டார் புஜாரா. இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் (458 ரன்கள்) உள்ளார் புஜாரா.

சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் புஜாரா சதமடித்துள்ளார். இதனால் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 18-வது சதத்தை அடித்துள்ளார் புஜாரா. கடந்தமுறை ஆஸ்திரேலியாவில் 4 சதங்கள் எடுத்தார் விராட் கோலி. இந்தத் தடவை 3 சதங்கள் எடுத்துள்ளார் புஜாரா. இந்தச் சதத்தின் மூலம் அவர் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* 5 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடினார் புஜாரா. அவரால் சராசரியாக 14 ரன்களையே எடுக்கமுடிந்தது. இதன்பிறகு இங்கிலாந்தில் எட்பாஸ்டனில் அவர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இத்தனைக்கும் பிறகு மீண்டு வந்துள்ளார் புஜாரா. தன்னை இங்கிலாந்தில் நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டவர் புஜாராதான். 

* எட்பாஸ்டன் டெஸ்டில் நீக்கப்பட்ட பிறகு புஜாரா எடுத்துள்ள ரன்கள்: 

1, 17, 14, 72, 132*, 5, 37, 0, 86, 10 123, 71, 24, 4, 106, 0, 130*. இந்தக் காலகட்டத்தில் கோலியை விடவும் அதிக சதங்கள் மற்றும் சராசரியைக் கொண்டுள்ளார் புஜாரா.

* புஜாராவின் 18-வது சதம் இது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது சதம். இந்தத் தொடரில் மட்டுமே 3 சதங்களை அடித்துள்ளார். 

* இன்றைய டெஸ்டில் முதல் 40 ரன்களை எடுக்க புஜாராவுக்கு 127 பந்துகள் தேவைப்பட்டன. மீதமுள்ள 90 ரன்களை எடுக்க அவருக்கு 123 பந்துகளே தேவைப்பட்டன. இந்தத் தொடரில் நான்காவது முறையாக 200 பந்துகளுக்கும் அதிகமாக எதிர்கொண்டுள்ளார். 

* ஆஸ்திரேலியாவில் அதிகப் பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர்கள்

டிராவிட் (2003-04) - 1203 பந்துகள்
ஹசாரே (1947-48) - 1192 பந்துகள்
புஜாரா (2018-19) - 1135 பந்துகள் (இதுவரை)
கோலி (2014-15) - 1093 பந்துகள்
கவாஸ்கர் (1977-78) - 1032 பந்துகள்

* இந்தத் தொடரில் 1000-க்கும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டுள்ளார் புஜாரா. இதற்கு முன்பு ஒரு டெஸ்ட் தொடரில் அவர் ஆயிரம் பந்துகளை எதிர்கொண்டதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான். பிப்ரவரி - மார்ச் 2017-ல் 4 டெஸ்டுகளில் 1049 பந்துகளை எதிர்கொண்டார்.

* இந்தத் தொடரில் இதுவரை 458 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார் புஜாரா. ஒரு டெஸ்ட் தொடரில் அவர் எடுத்த அதிக ரன்கள் இது. இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் 2012-13-ல் 438 ரன்கள் எடுத்தார். 

* ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்

கோலி (2014-15) - 4
கவாஸ்கர் (1977-78) - 3
புஜாரா (2018-19) - 3

3-ம் நிலை வீரராக அதிக டெஸ்ட் சதங்கள்

37 - சங்கக்காரா
32 - பாண்டிங்
28 - டிராவிட்
25 - ஆம்லா
20 - பிராட்மேன்
17 - கேன் வில்லியம்சன்/புஜாரா (தொடக்க வீரராக மற்றொரு சதமடித்துள்ளார் புஜாரா)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com