தவறுகளில் இருந்து பாடம் கற்பேன்: மயங்க் அகர்வால்

தவறுகளில் இருந்து பாடம் கற்பேன் என இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.


தவறுகளில் இருந்து பாடம் கற்பேன் என இந்திய தொடக்க வீரர் மயங்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் டெஸ்ட்டில் அறிமுகமான அகர்வால் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே போல் தனது இரண்டாவது டெஸ்ட்டான சிட்னி டெஸ்ட்டிலும் 77 ரன்களோடு ஆட்டமிழந்து முதல் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார். அவர் புஜாராவோடு இரண்டாம் விக்கெட்டுக்கு 116 ரன்களை சேர்த்தனர். 
கர்நாடகத்தைச் சேர்ந்த அகர்வால், இதுகுறித்து கூறியதாவது: பெரியளவிலான ஸ்கோரை எடுக்க முடியாமல் போனது வேதனை தருகிறது. 
இது ஒருவகையில் கற்கும் காலமாகும். இந்த தவறை மீண்டும் செய்யாமல் இருந்தால் நல்லது. நாதன் லயனை பந்துவீச்சை சிதறடிக்க வேண்டும் என நோக்கத்துடன் இருந்தேன். 
ஆஸி. பந்துவீச்சு கடினமாக இருந்தது. பெளன்ஸர்களாக வீசினர். புஜாராவின் ஆட்ட முறையில் இருந்து அதிகம் கற்க வேண்டியுள்ளது. பெரிய போட்டிகளில் ஆடுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர் ராகுல் திராவிட் என்றார்.
புஜாராவின் ஆட்டத்தை போல் ஆட வேண்டும்: லேபுஸ்சேன்
புஜாராவின் ஆட்டத்தை போல் ஆட வேண்டும் என ஆஸி. ஆல்ரவுண்டர் மார்னஸ் லேபுஸ்சேன் கூறியுள்ளார். அவர் கூறுகையில்:
முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் மிகவும் முக்கியமாகும். புஜாராவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. நீண்ட நேரம் பொறுமையாக ஆடினார். இந்த தொடர் முழுவதும் இதே பாணியை கடைபிடித்தார். 
எங்களால் முதல் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்தது. பிட்ச் முதல் மூன்று நாள்கள் கடினமாக உள்ளது. ஆனால் கடைசி 2 நாள்கள் சூழல் மாறி விடுகிறது. மூன்றாம் நிலை பேட்ஸ்மேனமாக களமிறங்குவது குறித்து தயக்கம் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com