புஜாராவுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம்

ஆஸி. டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி வரும் சேதேஸ்வர் புஜாராவுக்கு பிசிசிஐ சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


ஆஸி. டெஸ்ட் தொடரில் அபாரமாக ஆடி வரும் சேதேஸ்வர் புஜாராவுக்கு பிசிசிஐ சார்பில் புதிய ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புஜாரா இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 74.42 சராசரியுடன் 521 ரன்களை விளாசியுள்ளார். அவரது அபார ஆட்டத்தால் முதன்முறையாக ஆஸி. மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது இந்தியா. இதற்கு வெகுமதி தரும் வகையில், ஏ பிளஸ் ஊதிய ஒப்பந்த பிரிவின் கீழ் அவரை கொண்டு வர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கிரிக்கெட் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய், தேர்வாளர் குழுத் தலைவர் எம்எஸ்கே. பிரசாத் ஆகியோர் கேப்டன் கோலி, பயிற்சியாளர் சாஸ்திரியுடன் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்வர் எனத்தெரிகிறது. ஏ பிளஸ் பிரிவில் ஒரு வீரருக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவில் ரூ.5 கோடியும், பி பிரிவில் ரூ.3 கோடியும், சி பிரிவில் ரூ.1 கோடியும் ஊதியமாக தரப்படுகிறது.
ஏ பிளஸ் பிரிவில் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷிகர் தவன் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com