அதிரடியாக விளையாடி சதங்கள் எடுத்த டெய்லர், நிகோல்ஸ்: ஒருநாள் தொடரில் 3-0 என இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து!

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூஸிலாந்து அணி...
அதிரடியாக விளையாடி சதங்கள் எடுத்த டெய்லர், நிகோல்ஸ்: ஒருநாள் தொடரில் 3-0 என இலங்கையை வீழ்த்தியது நியூஸிலாந்து!

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது நியூஸிலாந்து அணி. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது அந்த அணி. 

நெல்சனில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. நியூஸி. தொடக்க வீரர்களான கப்தில் 2, மன்றோ 21 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் வில்லியம்சன் 55 ரன்களில் வெளியேறினார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டெய்லரும் நிகோல்ஸும் இலங்கைப் பந்துவீச்சைத் திணறடித்தார்கள். டெய்லர் 112 பந்துகளிலும் நிகோல்ஸ் 71 பந்துகளிலும் சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். 131 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்துக் கடைசிக்கட்டத்தில் ஆட்டமிழந்தார் டெய்லர். நிகோல்ஸ் ஆட்டமிழக்காமல் 80 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணி 350 ரன்களைத் தாண்ட உதவினார். நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. 

கடினமான இலக்கை எதிர்கொண்ட இலங்கை அணி 250 ரன்கள் கூட எடுக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 41.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆட்டமிழந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இலங்கைத் தரப்பில் பெரேரா 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது நியூஸிலாந்து. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com