தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

பெண்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து விளக்கமளிக்க ஹார்திக் பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

பெண்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து விளக்கமளிக்க ஹார்திக் பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும் கேஎல் ராகுலும் பங்கேற்றார்கள். இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? சச்சினா விராட் கோலியா என்கிற கேள்விக்கு இருவருமே விராட் கோலி எனப் பதில் அளித்தார்கள். இதற்குச் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது. அதே நிகழ்சியில் பெண்கள் குறித்து மோசமாகப் பேசியுள்ளார் பாண்டியா. இதையடுத்துச் சமூகவலைத்தளங்களில் பாண்டியாவுக்கு அதிக எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. மீ டூ இயக்கம் வளர்ந்துவரும் தருணத்தில் பாண்டியா இதுபோல பேசியிருக்கக்கூடாது என்று பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

பிறகு, தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாண்டியா. காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசியதற்குக் கிடைத்த எதிர்வினைகளைக் கண்டபிறகு என் பேச்சால் எந்தவிதத்தினாலும் மனவருத்தம் அடைந்தவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அந்நிகழ்ச்சியின் தன்மையினால் அவ்வாறு பேசிவிட்டேன். யாரையும் அவமரியாதை செய்வதோ யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதோ என் நோக்கமல்ல என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து விளக்கமளிக்க ஹார்திக் பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐயின் நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு பொறுப்பில்லாமல் பேசியுள்ளார்கள். பாண்டியாவின் மன்னிப்பு போதாது என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.

பிசிசிஐ நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராய் இந்தப் பிரச்னை குறித்துப் பேட்டியளித்ததாவது: ஹார்திக் பாண்டியா, ராகுல் ஆகியோரின் கருத்துகளுக்காக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் அவர்கள் பதிலளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com