இந்திய அணிக்கு எதிராக மோசமாக விளையாடிய வீரர்களைக் கொத்தாக வெளியேற்றியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

ஒரே சமயத்தில் இத்தனை பேர் கொத்தாக வெளியேற்றப்படுவார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்கமுடியாது... 
இந்திய அணிக்கு எதிராக மோசமாக விளையாடிய வீரர்களைக் கொத்தாக வெளியேற்றியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

இது எதிர்பார்த்த மாற்றம்தான். ஆனால் ஒரே சமயத்தில் இத்தனை பேர் கொத்தாக வெளியேற்றப்படுவார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்கமுடியாது. 

இலங்கைக்கு எதிரான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவுக்கு எதிராக மோசமாக விளையாடிய வீரர்களை நீக்கியுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் என ஆஸி அணியில் விளையாடிய நான்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். பந்துவீச்சாளர்கள் யாரும் நீக்கப்படவில்லை.

ஜோ பர்ன்ஸ், மேட் ரென்ஷா ஆகிய இருவரும் டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்கள். 20 வயது புகோவ்ஸ்கி புதிதாகத் தேர்வாகியுள்ளார்.

டெஸ்ட் தொடர் ஜனவரி 24 அன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கேன்பெர்ராவில் பிப்ரவரி 1 அன்று தொடங்குகிறது. 

இலங்கைக்கு எதிரான ஆஸி. டெஸ்ட் அணி: டிம் பெயின், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் டபுஸ்சான், நாதன் லயன், வில் புகோவ்ஸ்கி, மேட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com