சுடச்சுட

    

    பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: பாண்டியா, ராகுலுக்கு 2 ஒரு நாள் ஆட்டங்கள் தடை விதிக்க பிசிசிஐ சிஓஏ பரிந்துரை

    By DIN  |   Published on : 11th January 2019 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hardik-kl-rahul


    இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்தது தொடர்பாக இருவருக்கும் ஆஸி.தொடரில் 2 ஒரு நாள் ஆட்டங்கள் ஆட தடைவிதிக்கலாம் என பிசிசிஐ சிஓஏ வினோத் ராய் பரிந்துரைத்துள்ளார்.
    தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காஃபி வித் கரன் என்ற பெயரில் உரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பாண்டியா மற்றும் ராகுல் பங்கேற்றிருந்தனர். அப்போது இரவு விடுதி நிகழ்வுகளை மையப்படுத்தி பெண்கள் தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.
    அதற்கு பாண்டியா, ராகுல் இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் அதிருப்தியையும், விமர்சனத்தையும் வெளிப்படுத்தினர். இதையடுத்து சம்பவம் தொடர்பாக 24 மணி நேரத்துக்குள் விளக்கமளிக்குமாறு பாண்டியா மற்றும் ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியது பிசிசிஐ.
    இதனிடையே, பாண்டியா தனது மன்னிப்பு கோரி இருந்தாôர். இந்த விவகாரம் தொடர்பாக லோகேஷ் ராகுல் இதுவரை பிசிசிஐ நோட்டீஸுக்கு பதிலளிக்கவில்லை. 
    இது தொடர்பாக சிஓஏ விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் சிஓஏ தலைவர் வினோத் ராய் இருவருக்கும் 2 ஆட்டங்கள் தடை விதிக்க பரிந்துரைத்தார். மற்றொரு உறுப்பினரான டயானா எடுல்ஜி, பிசிசிஐ சட்டப்பிரிவின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார். பிசிசிஐ பொருளாளர் அனிருத் செளதரியும் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இருவரும் எவ்வாறு பங்கேற்றனர் என விசாரணை செய்ய வேண்டும். வீரர்களை அண்டாமல் விளையாட்டு பத்திரிகையாளர்களை ஒதுக்கி வைக்கும் நிலையில் இதுபோன்ற கேளிக்கை நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றது வியப்பை தருகிறது என்றார் செளதரி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai