சுடச்சுட

    

    முதல் ஒருநாள் ஆட்டத்துக்கான அணியை இன்றே அறிவித்தது ஆஸ்திரேலியா!

    By எழில்  |   Published on : 11th January 2019 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    oneday_cup1211

     

    சிட்னியில் நாளை நடைபெறவுள்ள முதல் ஒருநாள் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

    ஃபிஞ்ச் தலைமையிலான அணியில் பீட்டர் சிடிலும் லயனும் இடம்பிடித்துள்ளார்கள். சிடில், ஜை ரிச்சர்ட்சன், பெஹ்ரென்டோர்ஃப், நாதன் லயன் என நான்கு பிரதான பந்துவீச்சாளர்கள் ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

    எட்டு வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளார் சிடில். தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்சும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் களமிறங்கவுள்ளார்கள். இதற்கு முன்னால் 7-ம் நிலையில் ஆடிய அலெக்ஸ் கேரி இம்முறை தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணி: ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், பீட்டர் சிடில், மார்கஸ் ஸ்டாய்னிஸ்.

    ஒருநாள் தொடர்

    முதல் ஒருநாள் (சிட்னி): ஜனவரி 12 - காலை 7.50* முதல்
    2-வது ஒருநாள் (அடிலெய்ட்): ஜனவரி 15 - காலை 8.50* முதல்
    3-வது ஒருநாள் (மெல்போர்ன்): ஜனவரி 18 - காலை 7.50* முதல்

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai