சுடச்சுட

  

  நியூஸிலாந்துக்கு எதிராக டி20 தொடரிலும் தோற்று வெறுங்கையுடன் வெளியேறும் இலங்கை அணி!

  By எழில்  |   Published on : 11th January 2019 02:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nz_t20

   

  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை முழுமையாக வென்ற நியூஸிலாந்து அணி அடுத்ததாக டி20 தொடரையும் வென்றுள்ளது.

  1-0 என டெஸ்ட் தொடரையும் 3-0 என ஒருநாள் தொடரையும் வென்ற நியூஸிலாந்து அணி, ஆக்லாந்தில் நடைபெற்ற ஒரே ஒரு டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

  இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் 5 விக்கெட்டுகளை 55 ரன்களுக்குள் இழந்தது. ஆனால் நியூஸிலாந்தின் டெய்லரும் பிரேஸ்வெல்லும் சரிவைத் தடுத்தி நிறுத்தி அருமையான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்கள். டெய்லர் 37 பந்துகளில் 33 ரன்களும் பிரேஸ்வெல் 26 பந்துகளில் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். கடைசிக்கட்டத்தில் அறிமுக வீரர் ஸ்காட் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அசத்தினார். நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

  பந்துவீச்சில் நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்ட இலங்கை அணி, அதை பேட்டிங்கில் சரி செய்ய முயன்றது. ஆனால் சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால், வெற்றியை நெருங்கமுடியாமல் போனது. பெரேரா 3 சிக்ஸருடன் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் 16.5 ஓவர்களிலேயே 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இலங்கை அணி. நியூஸிலாந்தின் ஃபெர்குசன், இஷ் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

  நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது இலங்கை அணி. 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜனவரி 24 அன்று தொடங்குகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai