ஆஸி.யுடன் ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அபார உற்சாகத்தில் ஆஸியுடன் ஒரு நாள் தொடரையும் இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிர பயிற்சியில் தோனி
தீவிர பயிற்சியில் தோனி


டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அபார உற்சாகத்தில் ஆஸியுடன் ஒரு நாள் தொடரையும் இந்தியா வெல்லுமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களாக டி20, டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது இந்திய அணி. இதில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்தது.
பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி, 71 ஆண்டுக்கால காத்திருப்பை நிறைவு செய்தது. டெஸ்ட் தொடரில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதிலும் வெற்றி பெறவே இந்தியா முனைப்பாக உள்ளது.
12-ஆம் தேதி சிட்னியில் முதல் ஒரு நாள் ஆட்டம் தொடங்குகிறது. 
12-இல் முதல் ஒரு நாள் ஆட்டம்: கடந்த 1980இல் இருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதுவரை 127 ஒரு நாள் ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் 45 ஆட்டங்களில் இந்தியாவும், 72 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன. 10 ஆட்டங்களில் முடிவு கிட்டவில்லை.
கடந்த 1980இல் டிச. 6-இல் மெல்போர்னில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசியாக நாக்பூரில் 2017 அக்.1-இல் நடைபெற்ற ஆட்டத்தில் 7விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
அதன் பின் தற்போது ஓராண்டு கழித்து இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் தொடரில் மோதுகின்றன, தோனி, ஹார்திக் பாண்டியா:
உலகக் கோப்பை 2019-ஐ கருத்தில் கொண்டு அடுத்த 4 மாதங்களில் இந்திய அணி ஏராளமான ஒரு நாள் ஆட்டங்களில் ஆட உள்ளது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பின்னர் உள்ளது.
ஆஸி., நியூஸி ஒரு நாள் தொடர்களை வென்றால் இந்தியா இதிலும் முதலிடத்தை பெறும் வாய்ப்புள்ளது.ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மூத்த வீரர் தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தால் பாதிக்கப்பட்ட பாண்டியாவின் வருகை அணியை பலப்படுத்தியுள்ளது. மேலும் சிட்னி டெஸ்டில் இடம் பெறாத ரோஹித் சர்மாவும் ஒரு நாள் அணியில் இணைந்துள்ளார்.
ஆனால் சிட்னி டெஸ்டில் அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இரண்டாவது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 
வலுவான முன்வரிசை பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை ரோஹித்-ஷிகர் வலுவான தொடக்க வரிசையாக உள்ளனர். கேப்டன் விராட் கோலி, அம்பதி ராயுடு, கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், தோனி,என வலுவாய உள்ளது.
ஆல்ரவுண்டர்களாக ஹார்திக்பாண்டியா, கேதர் ஜாதவ் செயல்படுவர். பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டதால், சிராஜ் சேர்க்கப்பட்டார். கலீல் அகமது, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், சஹால், ஜடேஜா ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், ஷிகர் தவன், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி, ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சஹால், ரவீந்திரஜடேஜா, முகமது சிராஜ், கலீல் அகமது,முகமது ஷமி.

ஆஸி. ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ் உடல்நிலை பாதிப்பு 
உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆஸி. அணி வீரர் மிச்செல் மார்ஷ், இந்தியாவுடன் நடக்கவுள்ள முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இடம் பெற மாட்டார் என சிஏ அறிவித்துள்ளது.
டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஆஸி. அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவுடன் மோதுகிறது.
முதல் ஆட்டம் சனிக்கிழமை 12-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக பெர்த் ஸ்கார்டர்ஸ் பேட்ஸ்மேன் அஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும் அடிலெய்ட், மெல்போர்ன் ஒரு நாள் ஆட்டங்களுக்கும் மிச்செல் மார்ஷ் தகுதி பெறுவாரா என மருத்துவ அறிக்கையின்படி தெரியும் என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இலங்கையுடன் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் மிச்செல் மார்ஷ், அவரது சகோதரர் ஷான் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளனர்.
புதிய அணி விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான்மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், அஷ்டன் டர்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் காரே, ஜெய் ரிச்சர்ட்ஸன், பில்லி ஸ்டேன்லேக், ஜேஸன் பெஹ்ரெண்டர்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஸம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com