சுடச்சுட

  

  ஆஸி. முதல் பேட்டிங்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய வேகப்பந்துவீச்சாளர்!

  By Raghavendran  |   Published on : 12th January 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indvsaus_odi

   

  இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி 
  சிட்னியில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். முன்னதாக இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

  முதல் ஒருநாள் போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரம் பின்வருமாறு:

  இந்திய அணி விவரம்:

  ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது.

  ஆஸ்திரேலிய அணி விவரம்:

  ஆரோன் பின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கரே, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ஹை ரிச்சர்ட்சன், ஜேசன் பெர்ஹென்டர்ப்.

  பிக் பேஷ் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக மூத்த வீரர் பீட்டர் சிடில் அபாரமாக ஆடி வருவதால், 8 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai