சிட்னி ஒரு நாள் ஆட்டத்துக்கானஆஸி. அணி அறிவிப்பு

சிட்னியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் ஆட்டத்துக்கான ஆஸி. அணியை அதன் கேப்டன் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.


சிட்னியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் ஆட்டத்துக்கான ஆஸி. அணியை அதன் கேப்டன் ஆரோன் பின்ச் அறிவித்துள்ளார்.
அணி விவரம்-
ஆரோன் பின்ச் (கேப்டன்), 
அலெக்ஸ் கரே, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ஹை ரிச்சர்ட்சன், 
ஜேசன் பெர்ஹென்டர்ப்.
மூத்த வீரர் பீட்டர் சிடில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹை ரிச்சர்ட்சன், பெஹ்ரென்டர்ப் வேகப்பந்து 
வீச்சில் ஈடுபடுவர். ஆடம் ஸம்பாவுக்கு பதிலாக மூத்த சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆல்ரவுண்டர்கள் இடத்தை நிரப்புவர். பிக் பேஷ் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக பீட்டர் சிடில் அபாரமாக ஆடி வருவதால், மீண்டும் இடம் பிடித்துள்ளார். அலெக்ஸ் கரே, பின்ச் தொடக்க இணையாக களமிறங்குவர். பின்னர் கவாஜா, மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் மிடில் ஆர்டரில் இறங்குவர் என்றார் பின்ச்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com