ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு: கண்ணீருடன் அறிவித்தார் ஆன்டி முர்ரே

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (31) ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கண்ணீருடன் தெரிவித்தார்.
ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு: கண்ணீருடன் அறிவித்தார் ஆன்டி முர்ரே


ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியுடன் பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே (31) ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை கண்ணீருடன் தெரிவித்தார்.
டென்னிஸ் விளையாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ஜோகோவிச், பெடரர் நடால், ஆன்டி முர்ரே ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இவர்களை பிக் ஃபோர் என வீரர்கள் அழைத்து வந்தனர்.
உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான முர்ரே, வெள்ளிக்கிழமை கூறியதாவது-
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இடுப்பில் ஏற்பட்ட முறிவு, காயத்தால் ஏற்பட்ட வலி மீள முடியாததாக உள்ளது. குணமடையவில்லை.எங்கள் மண்ணில் விம்பிள்டன் போட்டியோடு ஓய்வு பெறலாம் என இருந்தேன். ஆனால் வலியும், வேதனையும் அதிகமாக உள்ளது.
இதனால் ஆஸி. ஓபன் போட்டியோடு ஓய்வு பெற உள்ளேன். வலி என்னை ஆட அனுமதிக்கவில்லை என்றார்.
77 ஆண்டுகளில் விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீரர் முர்ரே என்பது குறிப்பிடத்தக்கது. 
கடந்த 2018 ஆஸி.ஓபன் போட்டியில் காயத்தோடு விலகிய முர்ரே, ஜூன் மாதம் குயின்ஸ் கிளப் போட்டியில் மீண்டும் ஆட வந்தார்.
ஆனால் தொடர்ந்து ஆட முடியவில்லை. கடந்த வாரம் பிரிஸ்பேன் போட்டியிலும் 2-ஆவது சுற்றில் தோல்வியுற்றார்.
முர்ரேயின் வெற்றிகளில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 2 ஒலிம்பிக் தங்கம், 45 ஏடிபி பட்டங்கள் அடங்கும்.
டென்னிஸ் உலகம் மறக்க முடியாத ஜாம்பவான் முர்ரே என முன்னணி வீரர்கள் பயிற்சியாளர் பாராட்டியுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com