சுடச்சுட

  

  பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் மயங்க் அகர்வால், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
   சிட்னியில் முதல் ஒரு நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் இந்திய அணி தோல்வியுற்றது. இதற்கிடையே அணியில் இடம் பெற்றிருந்த பாண்டியா, ராகுல் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
   இதற்கிடையே மேலும் 2 ஆட்டங்கள் உள்ள நிலையில் மாற்றங்கள் செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி டெஸ்ட் ஓபனர் மயங்க் அகர்வால், தமிழகத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய்சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.அண்மையில் ஆஸி. டெஸ்ட் தொடரில் 2 அரைசதத்துடன் 195ரன்களை குவித்து வெற்றிக்கு உதவியாக இருந்தார் மயங்க் அகர்வால்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai