சுடச்சுட

  

  இந்திய அணியில் மாற்றம்: தமிழக வீரர், யு-19 நட்சத்திரம் சேர்ப்பு

  By Raghavendran  |   Published on : 13th January 2019 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gill,_shankar

   

  பாண்டியா, ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர்கள் விஜய் ஷங்கர், ஷுப்மன் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

  இதற்கிடையே ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் மேலும் 2 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், அணியில் மாற்றங்கள் செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ சனிக்கிழமை வெளியிட்டது.

  தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2-ஆவது ஒருநாள் போட்டிக்குள்ளாக இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

  இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சாதித்து வரும் மற்றொரு இளம் வீரர் ஷுப்மன் கில், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai