சுடச்சுட

  

  ப்ரீமியர் பாட்மிண்டன் லீக்: இறுதியில் பெங்களூரு-மும்பை

  By  பெங்களூரு,  |   Published on : 13th January 2019 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டி இறுதிச் சுற்றில் மும்பை ராக்கெட்ஸ்-பெங்களூரு ராப்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
   பெங்களூரில் சனிக்கிழமை இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் மும்பை-ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணிகள் மோதின. இதில் 4-2 என்ற ஆட்டக்கணக்கில் மும்பை ராக்கெட்ஸ் வென்றது.
   ஆடவர் ஒற்றையர் பிரிவில் மும்பை வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்சென், சமீர் வர்மாவும், , இரட்டையர் பிரிவில் மும்பையின் லீ யோங் டே-கிம் ஜி ஜங் இணையும், வென்றனர்.
   மகளிர் ஒற்றையர் பிரிவில் ஹைதராபாத் நட்சத்திர வீரர் பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் மும்பை அணி இறுதிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச் சுற்றில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai