சுடச்சுட

  

  24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் வரலாறு படைப்பாரா செரீனா வில்லியம்ஸ்?

  By DIN  |   Published on : 13th January 2019 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SERENA_WILLIAMS

  ஆஸ்திரேலிய ஓபன் 2019-இல் தனது 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வாரா முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  முதன் முதலில் கடந்த 1859-1865 ஆண்டுகளில் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பகுதியில் விளையாடப்பட்டது.
  கடந்த 1900-இல் பாரிஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் டென்னிஸ் அறிமுகம் செய்யப்பட்டது.
  டென்னிஸ் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் ஓரே ஆண்டில் நடத்தப்படுகின்றன. நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் ஓரே ஆண்டில் வெல்வது சிறப்பான சாதனையாகும். மகளிர் டென்னிஸில் மார்ட்டினா நவரத்திலோவா, கிறிஸ் எவர்ட், ஸ்டெப்பி கிராஃப், போன்றவர்களுக்கு அடுத்த கட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் அங்கம் வகிக்கிறார்.
  வில்லியம்ஸ் சகோதரிகள் என அழைக்கப்படும், செரீனா-வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் பல ஆண்டுகளாக உலக டென்னிஸ் அரங்கில் கோலோச்சி வருகின்றனர்.
  319 வாரங்கள் உலகின் நம்பர் ஒன்: அமெரிக்காவின் மிச்சிகனில் 1981-ஆம் ஆண்டு பிறந்த செரீனா கடந்த 1995-இல் தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார். அவருக்கு தற்போது 37 வயதாகிறது. மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யுடிஏ) அறிவிப்பின்படி 2002 முதல் 2017 வரை 8 முறை உலகின் நம்பர்ஒன் அந்தஸ்தை வகித்தார். ஸ்டெபி கிராஃப், நவரத்திலோவா ஆகியோருக்கு அடுத்து 319 வாரங்கள் தொடர்ந்து முதலிடம் வகித்து சாதனை படைத்தார்.
  4 ஒலிம்பிக் தங்கம்: ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், இரட்டையர் பிரிவில் 14, கலப்பு இரட்டையரில் 2 என மொத்தம் 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக பட்டஙகள் வென்றவர்கள் பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 2003-04, 2014-15-இல் ஓரே நேரத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையை உடையவர் செரீனா. 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார் செரீனா. 14 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தனது சகோதரி வீனஸ் உடன் சேர்ந்து வென்றார்.
  மன உறுதி, வேகமான சர்வீஸ், போன்றவற்றுக்கு பெயர் பெற்ற செரீனா பலமுறை கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றில் பின்தங்கி இருந்த நிலையில் போராடி பட்டம் வென்றவர்.
  23-ஆவது பட்டம்: தலா 7 முறை ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டனிலும், 6 முறை யுஎஸ் ஓபனிலும், 3 முறை பிரெஞ்சு ஓபனிலும் பட்டம் வென்றுள்ளார்.
  கடந்த 2017-இல் 8 வாரங்கள் கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் ஆஸி. ஓபன் போட்டியில் போராடி தனது 23-ஆவது பட்டத்தை வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் ஸ்டெபி கிராஃபின் 22 கிராண்ட்ஸ்லாம் சாதனையை முறியடித்தார். பின்னர் குழந்தை ஒலிம்பியா பிறந்ததால், ஓராண்டுக்கு பின் கடந்த விம்பிள்டன், போட்டியில் மீண்டும் களமிறங்கினார். அதிலும், யுஎஸ் ஓபன் இறுதிச் சுற்றிலும் தோல்வியடைந்து 24-ஆவது பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
  மார்கரெட் கோர்ட் 24 பட்டங்கள்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த மார்கரெட் கோர்ட் தான் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீராங்கனையாவார்.
  மகளிர் ஒற்றையர் பிரிவில் மார்க்கெரட் கோர்ட் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ஆஸி. ஓபனில் 11 முறை, பிரெஞ்சு ஓபனில் 5 முறை, விம்பிள்டனில் 3 முறை, யுஎஸ் ஓபனில் 5 முறை என 24 பட்டங்களைவென்றார். மேலும் 19 இரட்டையர், 21 கலப்பு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.
  சமன் செய்வாரா செரீனா?அவரது சாதனையை மெல்போர்னில் தொடங்கவுள்ள ஆஸி. ஓபன் போட்டியில் சமன் செய்வாரா செரீனா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
  -பா.சுஜித்குமார்

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai