ஆஸி. ஓபன்: நடால், பெடரர், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் பெடரர், ரபேல் நடால், மரியா ஷரபோவா ஆகியோர் தத்தமது முதல் சுற்று ஆட்டங்களில் வென்றுள்ளனர்.
ஆஸி. ஓபன்: நடால், பெடரர், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி


இந்திய வீரர் பிரஜ்னேஷ் தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் பெடரர், ரபேல் நடால், மரியா ஷரபோவா ஆகியோர் தத்தமது முதல் சுற்று ஆட்டங்களில் வென்றுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டியான ஆஸி. ஓபன் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 
அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் இரண்டு முறைக்கு மேல் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ராய் எமர்சன், ராட் லேவர் ஆகியோர் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் உள்ள ரபேல் நடால் முதல் சுற்றில் 6-4.6-3, 7-5 என ஆஸி. வீரர் டக்வொர்த்தை வீழ்த்தினாரர். கடந்த 2009-இல் நடால் ஆஸி.. ஓபன் பட்டத்தை வென்றிருந்தார்.
நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இஸ்டோமினை வென்றார். 
5-ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சன் 6-3, 5-7, 6-2, 6-1 என அட்ரியன் மன்னாரினோவையும், வென்றனர்.
மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா 6-0, 6-0 என பிரிட்டனின் ஹாரியட் டார்ட்டை வீழ்த்தினார். ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4. 6-2 என அமெரிக்காவின் டெய்லர் டெளன்சென்டை வென்றார். ஜூலியா ஜார்ஜஸ் தோல்வியுற்றார்.
பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தோல்வி: இந்தியாவின் முதல்நிலை வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 7-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பிரான்ஸஸ் டியாபோவிடம் தோல்வியுற்றார். தகுதிச் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, கர்மன் கெளர் தண்டியும் வெற்றி பெறவில்லை.

முதல் சுற்றிலேயே போராடி தோற்று வெளியேறினார் ஆன்டி முர்ரே
ஆஸி. ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியுடன் வெளியேறினார் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஆன்டி முர்ரே.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் வட்டாரத்தில் நடால், பெடரர், ஜோகோவிச்சுடன், கோலோச்சி வந்த 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் 31 வயது முர்ரே, கடுமையான இடுப்பு வலி பாதிப்பால், ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மெல்போர்னில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் ராபர்டோ பட்டிஸ்டாவை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4, 6-7, 6-7, 6-2 என்ற 5 செட் கணக்கில் போராடி தோற்றார் ஆன்டி முர்ரே.
இரண்டு செட்கள் தோல்வியுற்ற நிலையில் காயத்தையும் பொருள்படுத்தாமல் முர்ரே கடுமையாக போராடி அடுத்த 2 செட்களை வென்றார். கடைசி மற்றும் 5-ஆவது செட்டில் பட்டிஸ்டா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி 6-2 என வென்றார்.
4 மணி , 9 நிமிடங்கள் நடைபெற்ற போட்டிக்கு பின் முர்ரே மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களிடம் சல்யூட் செய்து விடைபெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com