லா லிகா: 400-ஆவது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை

லா லிகா கால்பந்து போட்டியில் 400-ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.
400-ஆவது கோலடித்த மெஸ்ஸி.
400-ஆவது கோலடித்த மெஸ்ஸி.


லா லிகா கால்பந்து போட்டியில் 400-ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி.
ஸ்பெயின் லா லிகா போட்டியின் ஒரு பகுதியாக நடப்பு சாம்பியன் பார்சிலோனா-எய்பார் அணிகள் இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு கேம்ப் நெளவில் நடைபெற்றது.
இதில் பார்சிலோனா கேப்டன் மெஸ்ஸி தனது 400-ஆவது கோலை அடித்தார். ஏனைய 2 கோல்களை லூயிஸ் ஸ்வாரஸ் அடித்தார். இதன் மூலம் 3-0 என எய்பார் அணியை வென்றது பார்சிலோனா. பட்டியலில் கூடுதலாக 5 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இதற்கு முன்பு ஜோஸப் பைகான் (செக். குடியரசு) 1931-55) 500 கோல்கள், ஜிம்மி மெக்கிரோரி (ஸ்காட்லாண்ட்) 1922-38) 410 கோல்கள், ஸ்டெபான் போபெக் (யுகோலேஸ்வியா, 1945-58) 403 கோல்களை அடித்துள்ளனர். தற்போது 4-ஆவதாக மெஸ்ஸி 400 கோல்களை அடித்துள்ளார்.
வாண்டா நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அதலெட்டிக்கோ மாட்ரிட் 1-0 என லெவன்டே அணியை வென்றது.
ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் பெட்டிஸ் அணியை போராடி வென்றது.
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து போட்டியில் மொனாக்கோ-மார்செய்ல் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
கோப்பா இத்தாலியா போட்டியில் இன்டர் மிலன் அணி 6-2 என்ற கோல் கணக்கில் பெனவென்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ப்ரீமியர் லீக் போட்டி ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என டாட்டன்ஹாம் அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com